Archives: ஜூலை 2016

அனுமதிக் கட்டணம்

ஆண்டு தோறும் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் லண்டனிலுள்ள தூய பவுல் பேராலயத்தைப் பார்க்கச் செல்கிறார்கள். 17ம் நூற்றாண்டின் பிந்திய காலத்தில் சர். கிறிஸ்டோபர் ரென் என்பவரால் வடிவமைத்துக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அவ்வாலயத்தைப் பார்ப்பதற்கு வசூலிக்கும் அனுமதிக் கட்டணம் மிகவும் பொருத்தமானதே. கிறிஸ்தவ ஆராதனைக் கூடமான இதைச் சுற்றுலா பயணிகள் பார்ப்பது என்பது முக்கியமான ஒன்றல்ல. ஆனால் “பலதரப்பட்ட மக்கள் அப்பேராலயத்திற்குள் வரும்பொழுது இயேசு கிறிஸ்துவில் தேவனின் மறுரூபமாக்கும் பிரசன்னத்தை உணர்வடையச் செய்வது” தான் பிரதானமான நோக்கமாகும். அவ்வாலயக் கட்டடத்தை…

விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுதல்

விசுவாசத்தை ஓர் மந்திர சூத்திரமாகக் கருதுவது ஓர் சோதனையாக இருக்கிறது. இதிலே நாம் வளர்ந்து பெருகினால் நாம் ஐசுவரியவான்களாகவும், ஆரோக்கியமுள்ளவர்களாகவும், எல்லா ஜெபத்திற்கும் பதில் பெற்றுக்கொண்டவர்களாய் திருப்திகரமான ஓர் வாழ்க்கை வாழுவோம். ஆனால், எப்பொழுதுமே வாழ்க்கை நேர்த்தியான ஓர் சூத்திரமாக அமையாது. அதற்கு சாட்சியாக எபிரெய நிரூபத்தின் ஆக்கியோன் எபிரெயர் 11ம் அதிகாரத்தில் அனைவரையும் உலுக்கும் வகையில் பழைய ஏற்பாட்டில் “உண்மை விசுவாசத்தை” வெளிப்படுத்தும் வகையில் விசுவாச வீரர்களின் பட்டியலைக் கொடுத்திருக்கிறார்.

“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” என்று (எபி. 11:6)ல் ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார்.…

உன் அயலானை நேசி

மனித இன ஆராய்ச்சியாளர் ஒருவர் ஒரு குக்கிராமத்தில் பல மாதங்கள் ஆராய்ச்சிக்குப்பின் தன் பணியை முடித்தவராய் தன் அனுபவத்தைக் கூறுகிறார். தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்காக விமான நிலையம் செல்ல, ஓர் வாகனத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் பொழுது, நேரம் போவதற்காக சிறு பிள்ளைகளுக்கு விளையாட்டு ஒன்றை நடத்த எண்ணினார். ஒரு மரத்திற்கருகாமையில் ஓர் பழக்கூடையையும், மிட்டாய்களையும் வைத்துவிட்டு அதை எடுக்க பிள்ளைகளிடம் ஓட்டப்பந்தயம் ஒன்றை நடத்த திட்டமிட்டார். அவர்கள் ஓடுவதற்குரிய சைகையைக் காட்டியபொழுது முடிவு கோட்டை அடைய ஒருவரும் போட்டி, போட்டுக்கொண்டு ஓட முயற்சிக்கவில்லை. அதற்கு…

சிறந்த நண்பர் - எப்பொழுதும்

என் தந்தை அடிக்கடி எனக்குக் கூறும் ஞானமுள்ள ஆலோசனைகளில் நான் மதித்து ஏற்றுக்கொள்ளும் ஆலோசனை, “ஜோ, நல்ல நண்பர்கள் வாழ்க்கையில் நாம் பெற்றுக்கொள்ளும் மாபெரும் பொக்கிஷங்களில் ஒன்று ஆகும்”. இது எவ்வளவு உண்மை! நல்ல நண்பர்கள் நமக்கிருக்கும் பொழுது நாம் ஒருபோதும் தனிமையாகவே இல்லை. அவர்கள் உங்கள் தேவைகள் என்ன என்பதில் கண்ணோக்கமாயிருப்பதுடன், உங்கள் சுக, துக்கங்களில் மிகவும் கரிசனையுடன் பங்கு கொள்வார்கள்.

இயேசு இவ்வுலகிற்கு வருவதற்கு முன் இரண்டு நபர்கள் மாத்திரம் தேவனின் சிநேகிதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். “ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவது…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தகுதியான காத்திருப்பு

புதிய பயணத்திற்கு முன்னானக் காத்திருப்பை பற்றிப் பேசுவோமென்றால்; இடியுடன் கூடிய மழையால் தாமதமான விமானத்தில் ஏறுவதற்கு அருண் பதினெட்டு மணிநேரம் காத்திருந்தார். இருப்பினும் அவரது பொறுமையும் விடாமுயற்சியும் பலனளித்தன. அவர் செல்ல வேண்டிய இடத்திற்குப் பறந்து சென்று முக்கியமான வியாபார கூட்டங்களுக்குச் சரியான நேரத்தில் சென்றது மட்டுமல்லாமல், விமானத்தின் ஒரே பயணியும் அவர் மட்டுமே. மற்ற பயணிகள் அனைவரும் பின்வாங்கினர் அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்தனர். விமானப் பணிப்பெண்கள் அவர் விரும்பிய உணவுப் பொருட்களை அவருக்குக் கொடுத்தனர், மேலும் அருண், "நான் நிச்சயமாக முன் வரிசையில் தான் அமர்ந்தேன். முழு விமானமும் உங்களுக்காக இருக்கும்போது தடையென்ன? " என்கிறார். இது மதிப்புமிக்க காத்திருப்பாக முடிவில் விளங்கியது.

ஆபிரகாமும் நீண்ட தாமதமாகத் தோன்றின ஒன்றைச் சகித்துக்கொண்டார். அவர் ஆபிராம் என்று அறியப்பட்டபோது, தேவன் அவரை "பெரிய ஜாதியாக்கி", " பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்" என்று கூறினார் (ஆதியாகமம் 12:2-3). எழுபத்தைந்து வயது முதியவருக்கு ஒரே ஒரு பிரச்சனை (வ. 4): வாரிசு இல்லாமல் அவர் எப்படி பெரிய தேசமாக மாற முடியும்? அவருடைய காத்திருப்பு சில சமயங்களில் தேவையற்றதாக இருந்தபோதிலும் (அவரும், மனைவி சாராயும் தேவனின் வாக்கை சில தவறான யோசனைகளின் மூலம் நிறைவேற்ற "உதவி" செய்ய முயன்றார்; பார்க்க 15:2-3; 16:1-2), அவர் "தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்” (21:5). அவரது விசுவாசம் பின்னர் எபிரேய ஆக்கியோனால் போற்றப்பட்டது (11:8-12).

காத்திருப்பது கடினமாகத் தோன்றலாம். மேலும், ஆபிரகாமைப் போல நாம் அதைச் சரியாகச் செய்யாமல் போகலாம். ஆனால் நாம் ஜெபித்து, தேவனின் திட்டங்களில் இளைப்பாறுகையில், விடாமுயற்சியுடன் இருக்க அவர் நமக்கு உதவுவார். அவரில், காத்திருப்பு எப்போதும் பலனளிக்கும்.

 

அதிகம் இயேசுவைப் போலத் தோன்றுதல்

தேவன் இந்திய சாம்பல் பச்சோந்தியை சூழ்நிலைக்கேற்ப உருமறைப்பில் வல்லதாக வடிவமைத்துள்ளார். அதனுடைய தோல் வண்ணத்தை மாற்றிக்கொள்ளும் தன்மையுடையது இது. அவை மரங்களில் ஏறும்போது போது அவற்றின் பட்டையுடன் இரண்டற கலக்க உதவுகிறது. பச்சோந்தி தன்னை மறைத்துக்கொள்ள விரும்பினால், அவை மேலான பார்வையிலிருந்து ஒளிந்துகொள்கின்றன, அவற்றின் இறகு உருமறைப்பு உதவியுடன் அவற்றின் சூழலோடு ஒன்றாகக் கலக்கின்றன.

தேவஜனங்களும் பெரும்பாலும் பெரிய சாம்பல் ஆந்தையைப் போன்றவர்களே. விருப்பத்தோடு அல்லது விருப்பமின்றியே எவ்வாறாயினும் நாமும் உலகத்தோடு எளிதில் கலந்து, கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கான அடையாளத்தை மறைக்க முடியும். பிதாவானவரால்

“உலகத்தில் தெரிந்தெடுத்து” அவருக்காகத் தரப்பட்டவர்களும், தம்முடைய “வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறவர்களுமான” தமது சீடர்களுக்காக (யோவான் 17:6) இயேசு ஜெபித்தார். குமாரனாகிய தேவன், பிதாவாகிய தேவனிடம் தாம் அவர்களை விட்டுப் பிரிந்த பிறகு, அவர்களைப் பரிசுத்தத்திலும் நிலைத்திருத்தலிலும் சந்தோஷமாக வாழ அவர்களைப் பாதுகாத்து அதிகாரமளிக்கும்படி வேண்டினார் (வ. 7-13). அவர் கூறினார், “நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்” (வ. 15). தம்முடைய சீஷர்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, பிரித்தெடுக்கபட வேண்டும் என்பதை இயேசு அறிந்திருந்தார், அதனால் அவர் அவர்களை நிறைவேற்றும்படி அனுப்பிய நோக்கத்தை அவர்களால் நிறைவேற்ற முடியும் (வ. 16-19).

உலகத்துடன் கலக்கும் உருமறைப்பில் சிறந்தவர்களாக மாறும்படியான தூண்டுதலிலிருந்து மீள, பரிசுத்த ஆவியானவா் நமக்கு உதவ முடியும். நாம் தினமும் அவருக்கு அடிபணியும்போது, நாம் அதிகம் இயேசுவைப் போல மாற முடியும். நாம் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழும்போது, அவர் தமது சகல மகிமையோடும் பிறரை கிறிஸ்துவிடம் இழுப்பார். 

 

வனாந்தரமான இடங்கள்

நான் ஒரு இளம் விசுவாசியாக இருந்தபோது, நான் இயேசுவை சந்திக்கும் இடமாக “மலையுச்சி” அனுபவங்களை நினைத்தேன். ஆனால் அந்த உயரங்கள், நீடிக்கவில்லை அல்லது வளர்ச்சிக்கு வழிவகுக்கவில்லை. வனாந்தரங்களில் தான் நாம் தேவனைச் சந்திக்கிறோம், வளர்கிறோம் என்கிறார் ஆசிரியர் லீனா அபுஜம்ரா. த்ரூ தி டெஸெர்ட் என்ற தனது வேத ஆராய்ச்சியில், “நம் வாழ்வில் உள்ள வனாந்தரங்களைப் பயன்படுத்தி நம்மைப் பலப்படுத்துவதே தேவனின் நோக்கம்” என்று எழுதுகிறார். “தேவனின் நன்மை உங்கள் வேதனையின் மத்தியில் பெறப்பட வேண்டும், வேதனை இன்றி அதனை நிரூபிக்க இயலாது” என மேலும் எழுதுகிறார்.

துக்கம், இழப்பு மற்றும் வலி போன்ற கடினமான இடங்களில்தான் நாம் நம் நம்பிக்கையில் வளரவும், அவருடன் நெருங்கவும் தேவன் உதவுகிறார். லீனா கற்றுக்கொண்டது போல், “தேவனின் திட்டத்தில் வனாந்தரம் அசட்டை செய்யப்பட்ட பகுதியல்ல, மாறாக நாம் வளரும் செயல்முறையில் ஒருங்கிணைந்த பகுதியாகும்.”

தேவன் பல பழைய ஏற்பாட்டின் முற்பிதாக்களை வனாந்தரத்திற்கு அழைத்துச் சென்றார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய அனைவருக்கும் வனாந்தர அனுபவங்கள் இருந்தன. வனாந்தரத்தில்தான் தேவன் மோசேயின் இருதயத்தை ஆயத்தப்படுத்தி, அடிமைத்தனத்திலிருந்து தம் ஜனங்களை வெளியே வழிநடத்த அவரை அழைத்தார் (யாத்திராகமம் 3:1-2, 9-10). வனாந்தரத்தில்தான் தேவன் தனது உதவியுடனும் வழிகாட்டுதலுடனும் நாற்பது ஆண்டுகளாக [இஸ்ரவேலர்] நடந்துவருகிறதை அறிவார் (உபாகமம் 2:7).

தேவன் மோசேயுடனும் இஸ்ரவேலருடனும் வனாந்தரத்தில் ஒவ்வொரு அடியிலும் இருந்தார், அவர் உங்களுடனும் என்னுடனும் இருக்கிறார். வனாந்தரத்தில் தேவனைச் சார்ந்திருக்கக் கற்றுக்கொள்கிறோம். அங்கே அவர் நம்மைச் சந்திக்கிறார்; அங்கே நாம் வளர்கிறோம்.